Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடகத்தில் பாதுகாப்பு மையங்களில் இருந்து தப்பியோடிய 119 சிறுவார்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பொதுநல மனு தாக்கல் கர்நாடகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து தப்பி சென்ற குழந்தைகள் பற்றியும், அவர்களை கண்டுபிடிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி கோரி கர்நாடக உச்ச நீதிமன்றத்தில் கோலார் மாவட்டத்தை சேர்ந்த ராஜண்ணா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
அந்த மனு மீதான விசாரணை, கர்நாடக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அலோக் ஆராதே மற்றும் நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
கடந்த விசாரணையின் போது மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகள் பற்றியும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .