Mithuna / 2024 பெப்ரவரி 15 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லியில் பேரணி நடத்த அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்ட வண்ணம் உள்ளனர். அரியானாவில் இருந்து விவசாயிகள் புதுடெல்லிக்கு செல்ல முடியாத வகையில் பல்வேறு தடுப்புகளை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (13) அரியானா- பஞ்சாப் மாநில எல்லையில் ஏராளமான விவசாயிகள் குவிந்தனர். அவர்கள் தடுப்புகளை அகற்றி முன்னேற முயன்றனர். அப்போது அரியானா பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி விவசாயிகளை விரட்டினர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்னர்.
மேலும், பல இடங்களிலிருந்தும் விவசாயிகள் பேரணியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள். இதனால் அசாதாரண நிலை உருவாகியுள்ளது.
இந் நிலையில் அரியானாவில் அம்பாலா, குருஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசர், படேஹாபாத், சிர்சா மாவட்டங்களில் மொபைல் இணைய தள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வியாழக்கிழமை (15) வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago