Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
75ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று வர்ண நிறங்களாலான கொடியை ஏற்றி வைத்தார் .
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின திருநாள் அமுதப்பெருவிழாவாக நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று 13ஆம் திகதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றினர்.
சுதந்திர தினத்தையொட்டி இன்று காலை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செங்கோட்டை வந்தடைந்தார்.
முப்படை வீரர்கள், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமரை வரவேற்றனர். அதை தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுகொண்டார்.
இதையடுத்து இந்தியாவின் பிரதமராக 9ஆவது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி வைத்தார்.
சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இவ்விழாவை முன்னிட்டு, செங்கோட்டையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனவே செங்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு சீல் வைத்து 400 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், செங்கோட்டையை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் வானில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago