Freelancer / 2025 ஜூன் 25 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல், ஈரான் இரு நாடுகளுமே அதனை மீறிவிட்டன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் வ்வ்ஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
ஈரானை இஸ்ரேல் தாக்கக் கூடாது. தனது விமானிகளை அத்தகைய பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஈரான் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசுமானால், அது மிகப் பெரிய மீறல். எனவே, இஸ்ரேல் அதில் ஈடுபடக்கூடாது. உண்மை என்னவென்றால், இரண்டு நாடுகளுமே போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளன. நேற்று நான் பார்த்த பல விடயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாக, நாங்கள் ஒப்பந்தம் செய்த உடனேயே இஸ்ரேல் குண்டுகளை வீசியது எனக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் குண்டுகளை வீசி இருக்க வேண்டியதில்லை.
இஸ்ரேலின் பதிலடி மிகவும் வலுவாக இருந்தது. அவர்கள் இருவரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக நான் நினைக்கிறேன். ஈரான், இஸ்ரேல் இரண்டு நாடுகளும் நீண்ட காலமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டு வருகின்றன. ஒரு நாடு என்ன செய்யும் என்பது மற்றொரு நாட்டுக்குத் தெரியாது. அப்படி ஒரு நிலைமை அங்கு இருக்கிறது. இது உங்களுக்குப் புரிகிறதா? என்று தெரிவித்தார். (a)
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
41 minute ago
58 minute ago