Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 19 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த 100 வயதான ஹோவர்ட் டக்கர் (Howard Tucker) என்பவர் உலகிலேயே அதிக வயதான மருத்துவர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில், க்ளீவ்லேண்ட் என்ற நகரில் வசித்து வரும் இவர், கடந்த 75 வருடங்களாக மருத்துவராகப் பணியாற்றி வருகின்றார்.

அத்துடன் காலையில் 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அவர்,கொரோனாத் தொற்றுப் பரவலின் போதும் காணொளி வாயிலாக மருத்துவ சேவையினை வழங்கி வந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ”ஓய்வு என்பது நீண்ட ஆயுளுக்கான எதிரி என்று கூறும் அவர், மருத்துவ துறையில் இருந்து ஓய்வு பெறக்கூடிய எண்ணமே தனக்கு இல்லையென்றும்” தெரிவித்துள்ளார்.
22 minute ago
28 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
41 minute ago