2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

சவுக்கம் காடு பகுதியில் திடீர் தீ பரவல்

Freelancer   / 2026 மார்ச் 31 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கம் காடு பகுதியில் நேற்று  தீ பரவல் ஏற்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் யுகதீஸின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதன் அடிப்படியில், இந்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்கு அவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கமைய தவிசாளர் உதயகுமார் யுகதீஸின் கோரிக்கைக்கு அமைய பருத்தித்துறை நகர சபையால் உடனடியாக தண்ணீர் தாங்கிகள் அனுப்பிவைக்கப்பட்டன.

அத்துடன், பருத்தித்துறை பிரதேச சபையின் செயலாளர், உப தவிசாளர் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டு இந்த தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, வனவளத் திணைக்களத்தினரும் மேற்படி இடத்துக்கு வருகைதந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .