2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

’எங்களை சரணடைய வைப்பதற்கு முயல்வது தோல்வியையே தரும்’

Freelancer   / 2026 ஏப்ரல் 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் முடிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், கடந்த இரு நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் ஈரான் அரசு ஊடகமான ஐ.எஸ்.என்.ஏவில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் வெளியிட்ட அறிக்கையில்,

நாங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறோம். ஆனால் சரணடைய நிர்பந்திப்பதை ஏற்க மாட்டோம். ஈரானை சரணடைய வைக்கவோ அல்லது ஈரான் மீது பலத்தை திணிக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியடையும். மக்களும் அத்தகைய அணுகுமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஈரான் ஒருபோதும் போரை நாடவில்லை

எங்கள் நாட்டின் மீதான தாக்குதல் எந்த அதிகாரத்தின் பேரில், எந்தக் காரணத்துக்காக நடத்தப்பட்டது? சர்வதேச சட்டம் மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோரைக் குறிவைத்து தாக்கவும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய மையங்களை அழிப்பதற்கும் என்ன நியாயம் இருக்கிறது? என்றும் அவர் கேள்வியெழுப்பினார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .