Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 05 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையேயான அணு பேச்சுக்கள் ஓமானில் இவ்வாரம் நடைபெறுமென ஈரானின் வெளிநாட்டமைச்சர் அப்பாஸ் அரகச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக புதன்கிழமை (04) இரவு அரகச்சி அறிவித்திருந்தார். முன்னதாக பேச்சுக்களின் அமைப்பு, இடம் தொடர்பான இணக்கமில்லாமை காரணமாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு வலுவிழப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
முன்னர் துருக்கியில் திட்டமிட்டப்பட்டதற்கு பதிலாக ஓமானில் ஈரானுடன் உயர் மட்டப் பேச்சுகளில் ஐக்கிய அமெரிக்கா பங்கேற்குமென வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்டார், துருக்கி, எகிப்து மத்தியஸ்தர்களால் பேச்சுக்களில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் ஈரானுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நீண்டதூர ஏவுகணைகளின் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள், பிராந்தியத்தில் ஈரானின் நட்புறவுக் குழுக்களுக்கு ஆயுதமளித்தலில் கட்டுப்பாடுகள் ஆனவை முன்மொழியப்பட்டதில் முக்கியமான விடயங்களாக காணப்படுகின்றன.
20 minute ago
30 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago
4 hours ago
5 hours ago