2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

‘ஜனநாயகன்’ லீக் : 6 பேர் கைது

Freelancer   / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யான அனைத்து இணை​யதளங்​களை​யும் முடக்கி சைபர் க்ரைம் பொலிஸார் நடவடிக்கை எடுத்​துள்​ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், முன்​னணி இயக்​குநர் ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் உரு​வான திரைப்​படம் ஜனநாயகன். விஜய்​யின் திரைப்​பயணத்​தில் இது கடைசிப் படம் என்​ப​தால், உலகெங்​கிலும் உள்ள ரசிகர்​கள் மத்​தி​யில் இப்​படத்​துக்கு பெரும் எதிர்​பார்ப்பு நிலவி வந்​தது. கடந்த ஜனவரி மாதம் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு வெளி​யாக வேண்​டிய இப்​படம், தணிக்கை சிக்​கல்​களால் தள்​ளிப்​போனது.

நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்​கைக் குழு படத்தை ஆய்வு செய்​தது. விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் பெற்று படம் திரையரங்​கு​களில் வெளி​யாகும் என ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்த வேளை​யில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப் பதிப்​பும் இணை​யதளங்​களில் சட்​ட​விரோத​மாகக் கசிந்​து, படக்​குழு​வினர் மட்​டுமின்​றி, தமிழ் சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக டி.ஜி.பி. அலு​வல​கத்​தில் அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில், சைபர் க்ரைம் பொலி​ஸார் விசா​ரணையை மேற்​கொண்​டனர்.

முதல்​கட்​ட​மாக, படம் வெளி​யான அனைத்து இணை​யதள முகவரி​களை​யும் கண்​டறிந்​து, அவற்றை சைபர் க்ரைம் பொலி​ஸார் தற்​போது முடக்​கி​யுள்​ளனர். மேலும் இவ்​வளவு பெரிய பட்​ஜெட் படத்தை இணை​யத்​தில் வெளி​யிட்ட நபர்​கள் யார்?

இதன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார்? என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக மாநில சைபர் கிரைம் பொலிஸார் 6 பேரை கைது செய்​துள்​ளனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெறுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .