Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 23 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து வருவதால், கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை "மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு" அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அதன் நட்பு நாடான கத்தாருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கத்தாரில் இருந்த படைகளையும் அமெரிக்கா திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதோடுமட்டுமின்றி கட்டாரிலுள்ள தோஹாவின் தென்மேற்கே உள்ள இரண்டு ராணுவ தளங்களில் அல் உதெய்த் விமான தளத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 10,000 வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையைத் தொடர்ந்து கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. R
25 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
31 minute ago
47 minute ago