2024 மே 18, சனிக்கிழமை

கணவரைக் கொன்று புத்தகம் வெளியிட்ட பெண்

Ilango Bharathy   / 2023 மே 14 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கணவரைக்  கொன்றுவிட்டு,  அவரது மறைவால் அடைந்த மன வேதனையை தெரிவிக்கும் விதமாக பெண்ணொருவர் புத்தகமொன்றை வெளியிட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்தாண்டு மார்ச் மாதம், எரிக் ரிச்சின் என்பவர் மர்மமாக உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி கோரி அனைவரிடமும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் கணவரின் இறப்பால் ஏற்பட்ட விரக்தி குறித்து புத்தகம் ஒன்றையும்  எழுதி அவர் வெளியிட்டார்.

ஆனால், மனைவி கோரி தன்னை விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாக எரிக் இறப்பதற்கு முன் தெரிவித்து வந்ததாக அவரது நண்பர்களும், உறவினர்களும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

 இதன்பேரில் கோரியின் தொலைபேசி மற்றும் கணினியை பொலிஸார் சோதனையிட்டனர். அதில், போதை மருந்து வாங்கி, அதை மதுவில் அதிகளவில் கலந்து கொடுத்து எரிக்கை கொன்றதே கோரி தான் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 33 வயதான கோரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .