பெண்ணொருவர் கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தகாரா வின்ஹோல்ட் என்ற பெண்ணே இவ்வாறு இருமுறை கர்ப்பம் தரித்துள்ளார்.
ஏற்கனவே இவர் இதற்கு முன்பாக மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அவர் கர்ப்பமானதோடு, ஒரு மாதம் கழித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மருத்துவர்கள்
”இத் தனித்துவமான மருத்துவ நிலை சூப்பர் பீடேசன் ”என்று அழைக்கப்படுகின்றது எனவும், இது முதல் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடைசியில் பிரசவ நேரத்தில் அப்பெண்ணுக்கு 6 நிமிட வித்தியாசத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவ் பெண் கருத்துத் தெரிவிக்கையில் ”என்னுடைய கர்ப்ப காலத்தில் நடந்த அனைத்தும் ஒரு அதிசயம் என்று நான் 100% நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.