2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

எல்ல விபத்து: சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா?

Freelancer   / 2025 செப்டெம்பர் 06 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்ல வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதியினுடைய இரத்த மாதிரிகள் நாளை (7) மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படும் என எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தங்காலை நகரசபையின் ஊழியர்கள் குழுவொன்று நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று மீண்டும் தங்காலைக்கு தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பிக் கொண்டிருந்த பேருந்து 4 ஆம் திகதி இரவு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் 15 ஆவது மைல்கல் பகுதியில் சொகுசு வாகனமொன்றுடன் மோதி பின்னர் வீதியின் அருகே இருந்த தடுப்புச் சுவரில் மோதி ராவண எல்ல பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.

சுற்றுலாப் பேருந்தின் சாரதியான தங்காலை, ஹெனகடுவவைச் சேர்ந்த சிரத் திமந்த (25) என்ற இளைஞரும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.

குறித்த பேருந்தை செலுத்தும் போது அதன் சாரதி போதைப்பொருள் அல்லது மதுபானம் பயன்படுத்தியிருந்தாரா என்பதை அறிய, அவரது இரத்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எல்ல பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .