2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

மித்தெனியவில் கைக்குண்டுகள், தோட்டாக்கள் மீட்பு

Freelancer   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மித்தெனிய - தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கைக்குண்டுகளும், ரீ 56 ரகத்தைச் சேர்ந்த 18 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கைக்குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் காணியில் புதைக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

முன்னதாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில், 42 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படும் மூலப்பொருள் மற்றும் இரசாயனம் அடங்கிய கலவை மீட்கப்பட்டிருந்தது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .