Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 12 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகின் மிகப்பெரும் செல்வந்தரும், டெஸ்லா ,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் (Elon musk), டுவிட்டரை அண்மையில் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார்.
குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் கடமையாற்றிவரும் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்த எலோன், ப்ளூ டிக் கட்டண உயர்வு, ஆட்கள் குறைப்பு, வருவாய் இரட்டிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இதன்காரணமாக பெரும்பாலான மக்களின் வெறுப்பை அவர் சம்பாதித்து வருகின்றார்.
இந்நிலையில் ‘வரலாற்றிலலேயே மிகப்பெரிய சொத்து இழப்பை எதிர்கொண்ட முதல் நபர் என்ற‘ கின்னஸ் சாதனையை எலோன் மஸ்க் படைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டில் இருந்து தோராயமாக 182 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (£153B; €173B) மதிப்பிலான சொத்தை மஸ்க் இழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எலோன் மஸ்க், தனக்குச் சொந்தமான மின்சார கார் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் மதிப்பில் 11% என்ற அளவில் பங்கு மதிப்பு சரிவைக் கண்டார்.
ஒரு ஆண்டில் மாத்திரம் 11% மதிப்பு வீழ்ச்சி என்பது அவருக்கு கிடைத்த மிகப் பெரும் பொருளாதார வீழ்ச்சி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago