Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூன் 06 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் கிழக்கு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் Old Ferry Boat என்னும் பழமையான கேளிக்கை (Pub) விடுதியொன்று உள்ளது.
குறித்த விடுதியில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 17 ஆம் திகதியன்று அங்கு வரும் மக்களுக்கு பல திடுக்கிடும் அனுபவங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக அந்நாளில் ”வித்தியாசமான உருவங்கள் தோன்றுவதாகவும், விளக்குகள் அச்சம்கொள்ளும் வகையில் ஒளிர்ந்து பின்னர் அணைவதாகவும், இதற்கு காரணம் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சம்பவமே எனவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கேளிக்கை விடுதியில் ஜூலியட் டெவ்ஸ்லி எனும் இளம்பெண் வாழ்ந்து வந்ததாகவும், இவர், டாம் சூல் என்பவரைக் காதலித்து வந்ததாகவும், சரியான நேரத்தில் டாம் வராததால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் எனவும் குறித்தக் கேளிக்கை விடுதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஜூலியட்டின் உடல் அக் கட்டிடத்தின் உள்ளேயே புதைக்கப்பட்டுள்ளது எனவும், அந்த இடத்தின் மீது கறுப்பு நிற கல்லைப் பதித்து, அதன்மீது யார் காலும் படாமல் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூலியட் மரணித்த நாள் மார்ச் 17 ஆம் திகதி எனவும் அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அதே திகதியில் ஜூலியட் அங்கு வருவதாக உள்ளூர் மக்கள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தினத்தில் அக்கட்டிடத்தில் உள்ள விளக்குகள் வழக்கத்திற்கு மாறாக பிரகாசமாகவோ அல்லது அணைந்துபோவது போன்றோ எரியும் எனவும், விளக்குகளை அணைத்தாலும் அவை ஒளிர்ந்துகொண்டே இருக்கும் எனவும் 'குட்நைட் ஜூலியட்' என்று கூறினால் மட்டுமே அவை அணையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .