Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெருசசேலத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள பஸ் நிறுத்தமொன்றிலான துப்பாக்கிச் சூடொன்றில் இன்று ஐவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ள நிலையில், தாக்குதலாளிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யார் துப்பாக்கிச்சூட்டை நடாத்தியதோ அல்லது என்ன காரணமோ என்பது உடனடியாகத் தெளிவில்லாமலுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட இரண்டு பலஸ்தீனிய எதிர்ப்புப் போராளிகளை மெச்சுவதாக பலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்தபோதும் உரிமை கோரியிருக்கவில்லை.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மோசமான நிலையிலுள்ள அறுவர் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்ததாக அம்புலன்ஸ் சேவை மேலும் தெரிவித்துள்ளது.
இரண்டு தாக்குதலாளிகள் காரில் வந்து, பஸ் நிறுத்தமொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை மெச்சிய இன்னொரு பலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிகாத்தும் உரிமை கோரியிருக்கவில்லை.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago