2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி: கோமாவில் இருந்து மீண்டவர் நீதிமன்றில் ஆஜர்

Editorial   / 2025 டிசெம்பர் 19 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தனர். அவர்களை குறிவைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 16 பேர் பலியானார்கள். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன் என்பதும், அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் உறுதியானது.

முன்னதாக பொலிஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் தந்தை சாஜித் அக்ரம் உயிரிழந்தார். கோமா நிலைக்கு சென்ற மகன் நவீத் அக்ரமுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கோமாவில் இருந்து மீண்ட நிலையில் நவீத் அக்ரம் மீது கொலை, பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட 59 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அவரை காணொலிக்காட்சி மூலம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X