Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூன் 02 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியில் தீக்குளித்து தன் உயிரை மாய்க்க முயன்ற நபர் அருகே நின்று சிலர் செல்பி எடுக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கலாட்டா கோபுரத்தின் அருகே நீண்ட நேரமாக அரிவாள் மற்றும் பெட்ரோல் கலனுடன் நபர் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த அந்நபர் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீயைப் பற்ற வைத்தியுள்ள நிலையில் அங்கிருந்த சிலர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
எனினும் உடனடியாகச் செயற்பட்ட சிலர், தீ அணைப்பான்களால் தீயை அணைத்து அவரை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீப்பற்றி எரிபவருடன் செல்பி எடுக்க முன்ற சிலர் குறித்து வெளியான வீடியோவானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .