Ilango Bharathy / 2022 டிசெம்பர் 27 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் கொரோனாத் தொற்றுப் பரவலானது மீண்டும் தீவிரமடைந்து வருகின்றது.
குறிப்பாக அந்நாட்டில் ஒமைக்ரோனின் `BF.7` துணை வைரஸ்களின் பரவலானது நாளுக்கு நாள் வெகுவான அதிகரித்து வருவதால் அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடுமையான ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அரசு அமுல்படுத்தி வருகின்றது.
அதே சமயம் சீன அரசு வெளியிடும், தொற்று விவரங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளதாக அண்மைக்காலமான உலக நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

குறிப்பாக லண்டனைச் சேர்ந்த சுகாதார தரவு நிறுவனமான ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கொரோனாப் பாதிப்பு ஆளாகின்றனர் எனவும், 5 ,000க்கும் மேற்பட்டோர் தினமும் உயிரிழக்கின்றனர் எனவும் கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து சீன அரசாங்கம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் “இதுவரை தினசரி கொரோனாப் பாதிப்பை வெளியிட்டு வந்த சீனாவின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனாப் பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என கடந்த 25 ஆம் திகதி அறிவித்துள்ளது”
அதே சமயம் கொரோனா பாதிப்பு விவரங்கள் இனி சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து சீன அரசு தெரிவிக்கவில்லை. சீனாவின் இந்நடவடிக்கையாது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
32 minute ago