2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பாகிஸ்தானில் விழுந்து நொறுங்கிய விமானம்

Editorial   / 2020 மே 22 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து இன்று (22) விபத்துக்குள்ளானது. 

லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. 

விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். 

அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .