2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

போர் செய்திகளை வைத்து லாபம் ஈட்டிய வர்த்தகர்கள்

Freelancer   / 2026 ஏப்ரல் 11 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈ​ரான் மீதான போர் கடந்த பெப்​ர​வரி 28 ஆம் திகதி தொடங்​கிய​திலிருந்​து, சர்​வ​தேச நிதிச் சந்​தைகளில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் சில மர்​ம​மான வர்த்​தகங்​கள் அரங்​கேறி வரு​வ​தாக கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, அமெரிக்க அரசின் முக்​கிய​மான கொள்கை முடிவு​கள் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படு​வதற்கு சில நிமிடங்​களுக்கு முன்​ன​தாகவே, சந்​தை​யில் பெரும் முதலீடு​கள் செய்​யப்​படும் போக்கு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

வெனிசுலா மீதான தாக்​குதல், ஈரான் மீதான தாக்​குதல், அமெரிக்​க - ஈ​ரான் போர் நிறுத்த அறி​விப்பு உள்​ளிட்ட நிகழ்​வு​களுக்கு சில மணி நேரங்​களுக்கு முன்​பாகவே இன்​சைடர் டிரேடிங் நடை​பெற்​ற​தாக​வும், அதன் மூலம் சில வர்த்​தகர்​கள் கோடிக்​கணக்​கில் லாபம் ஈட்​டி​யுள்​ள​தாக​வும் தகவல் வெளி​யாகி உள்​ளது.  வெள்ளை மாளி​கை​யில் இரகசி​யத் தகவல்​களை முன்​கூட்​டியே அறிந்து இந்த ‘உள்​நோக்க வர்த்​தகம்' நடை​பெற்​றிருக்​கலாம் என்ற பலத்த சந்​தேகம் வர்த்தக உலகில் பலரிடம் எழுந்​துள்​ளது.

கடந்த மார்ச் மாதம் வரை இத்​தகைய முறை​கேடு​களை மறுத்து வந்த வெள்ளை மாளிகை, ஏப்​ரல் மாதத்​தில் தனது நிலைப்​பாட்டை மாற்​றிக் கொண்​டது. ரகசி​யக் கொள்கை முடிவு​கள் தொடர்​பான அரசு ஊழியர்​கள் சந்​தைகளில் வர்த்​தகம் செய்​யக் கூடாது என சுற்​றறிக்கை அனுப்​பப்​பட்​டுள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .