Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானில், நேற்று (19), பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து, பஞ்சாப் மாகாணத்திற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது.
பலூசிஸ்தானின் பர்ஹன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கும்பல் பஸ்சை இடைமறித்தது.
பஸ்ஸில் இருந்த பயணிகளை கீழே இறக்கிய அந்த கும்பல் அடையாள அட்டைகளை சோதித்தது. அதில், 7 பயணிகள் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்ததும் அவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், 7 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago