Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 13 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் ஆதரவை நாங்கள் பெற்றால் இந்த தீவிரவாத அரசை (பாகிஸ்தானை) பலூச் தேசத்தால் ஒழிக்க முடியும் என, பலுசிஸ்தான் விடுதலைப் படை (பிஎல்ஏ) தெரிவித்துள்ளது.
மேலும், இது, அமைதியான, வளமான மற்றும் சுதந்திர பலுசிஸ்தான் உருவாக வழி வகுக்கும் என்றும், பிஎல்ஏ கூறியுள்ளது.
பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி, “பலுசிஸ்தான் விடுதலைப் படை” (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையல் பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச், திங்கட்கிழமை (12) கூறுகையில்,
‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு எதிராக 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை பிஎல்ஏ நடத்தியது.
“சமீபத்திய இந்த தாக்குதல் 51க்கும் மேற்பட்ட இடங்களில் பல மணி நேரம் நீடித்தது. எதிரியை அழிப்பது மட்டுமே இந்த தாக்குதலின் நோக்கமல்ல. தற்காப்பு நிலைகள் மற்றும் தயார்நிலையை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்” என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago