Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மார்ச் 23 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா, தெற்கு டகோட்டாவில், ஜூலை 1ஆம திகதி முதல் பாடசாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொது கழிப்பறையை பயன்படுத்துவதை தடுக்கும் புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
அமெரிக்காவில், ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக கடந்த ஜனவரியில் அவர் பதவிக்கு வந்ததில் இருந்து திருநங்கைகளின் உரிமைகளை குறைக்கும் நோக்கில் தொடர்ச்சியான நிர்வாக உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டு வருகிறார்.
அந்தவகையில், அங்குள்ள தெற்கு டகோட்டா மாகாணத்தில் திருநங்கைகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தடையானது வருகிற ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அம்மாகாண ஆளுநர் லாரி ரோடன் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகள் அந்த வசதியைப் பயன்படுத்துவதைத் தடுக்க அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், பாடசாலைகள் அல்லது மாநிலத்திற்கு எதிராக அறிவிப்பு மற்றும் தடை உத்தரவு நிவாரணம் பெறவும் இந்த பிரேரணவ அனுமதிக்கிறது.
அமெரிக்காவில் இந்த தடையை பிறப்பிக்கும் 13ஆவது மாகாணம் இதுவாகும்.
டென்னசி, மொன்டானா மாகாணத்திலும் இந்த பிரேரணை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .