2025 ஜூலை 05, சனிக்கிழமை

பிஹார் மஹதோ குடும்பத்தினர் கீதாவின் பெற்றோர் அல்ல

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமியாக இருந்தபோது இந்தியாவிலிருந்து தவறுதலாக பாகிஸ்தானுக்குச் சென்று பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய காது கேளாத, வாய் பேச முடியாத இளம்பெண் கீதா, பிஹாரைச் சேர்ந்த மஹதோ குடும்பத்தினரின் மகள் அல்ல மரபணுப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் இதுதொடர்பாகக் கூறும் போது, “எதிர்வரும் 23ஆம் திகதி, இந்தூர் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ் கீதாவைச் சந்தித்து நலம் விசாரிப்பார் என்றும், மரபணுப் பரிசோதனை முடிவுகளில், பிஹாரைச் சேர்ந்த மஹதோ குடும்பத்தினர், கீதாவின் பெற்றோர் அல்ல எனத் தெரிய வந்துள்ளது எனவும் எய்ம்ஸ் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பரிசோதனையின் முடிவுகள் மஹதோ குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

முன்னதாக, மஹதோ குடும் பத்தினரின் புகைப்படத்தைப் பார்த்த கீதா, அவர்கள் தனது பெற் றோராக இருக்கலாம் என அடையாளம் காட்டினார். ஆனால், இந்தியா வந்த பிறகு, அவர் அதை மறுத்திருந்தார்.  

தற்போது கீதா இந்தூரில் உள்ள காதுகோளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான மறு வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .