S.Renuka / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு தனது இராணுவக் கட்டாய ஆள்சேர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளது.
இதன்படி, இராணுவ சேவைக்குத் தகுதியான இளைஞர்கள் இனி தானாகவே (Automatically) பதிவு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள சட்டப்படி, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் 'தேர்வு சேவை அமைப்பில்' தங்களாகவே முன்வந்து பதிவு செய்வது கட்டாயமாகும்.
ஆனால், டிசெம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின்படி, தகுதியுள்ள நபர்களை அரசே தனது தரவுத்தளங்கள் மூலம் நேரடியாகப் பதிவு செய்யும். வியட்நாம் போருக்குப் பிறகு அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago