Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 12 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையும், விவாகரத்து ஆனவருமான மேகன் என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், திருமணத்தின் பின்னர் இருவரும் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியதால் HRH எனப்படும் அரசப்பட்டத்தை ஹாரி இழக்க நேரிட்டது.
இந்நிலையில் இளவரசர் ஹாரி அண்மையில் “தன் மனைவி மேகன் ஒரு நடிகையாக இருந்தபோது அவர் நடித்த ஆபாசக்காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஹாரியும் மேகனும் டேட்டிங் செய்ய தொடங்கியதுமே மேகன் விளம்பரங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டது.
குறிப்பாக, Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் மேகன் நடிக்கும்போது, ஹரி ஷூட்டிங் பார்க்கச் சென்றிருந்தாராம். அப்போது தன் காதலியாக இருந்த மேகனுடன் ஒரு நடிகர் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளை ஹரி கண்டுள்ளார்.
தன் காதலி வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த அந்த ஆபாசக் காட்சிகளைப் பார்த்ததால், அக் காட்சிகளை தன் மனதில் இருந்து அகற்ற, தனக்கு மின்சார ஷாக் சிகிச்சை தேவை என தான் நினைத்ததாக ஹாரி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago