Editorial / 2025 ஜூலை 18 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா தமது மனைவி, மகனை புதன்கிழமை (16) சந்தித்து உரையாடினார்.
இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா திட்ட கமாண்டா் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் சா்வதேச விண்வெளி நிலையத்தைக் கடந்த ஜூன் 26-ஆம் திகதி சென்றடைந்தனா். இவர்கள் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 433 மணிநேரம் செலவழித்துள்ளனர்.
சுபான்ஷு சுக்லாவின்சர்வதேச விண்வெளி நிலைய பயணம் வெற்றிகரமாக முடிவடைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சாதனையை நிகழ்த்திய சுக்லா உள்பட 4 வீரா்களும் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) பகல் 3 மணியளவில் பூமியில் பத்திரமாக தரையிறங்கினர்.
கிட்டத்தட்ட மூன்று வார காலம் புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு திரும்பியிருப்பதால் அவா்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதற்காக, 7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்தநிலையில், மருத்துவ கண்காணிப்பிலிருக்கும் சுக்லாவை அவரது மனைவியும் மகனும் புதன்கிழமை(ஜூலை 16) நேரில் சந்தித்தனர்.
அப்போது அவர்களை சுக்லா கட்டியணைத்து அரவணைத்து அன்பைப் பொழிந்தார். இந்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
5 minute ago
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
31 minute ago
3 hours ago
4 hours ago