Freelancer / 2026 பெப்ரவரி 04 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் இன்று 04 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இப்பேச்சுவார்த்தை நாளை 05 ஆம் திகதியும் நடைபெறும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவிடமிருந்து எனக்கு அறிக்கை கிடைத்துள்ளது. இப்போருக்கு உண்மையாகவும், கௌரவமாகவும் தீர்வு காணும் நோக்கில் ஆக்கபூா்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஓரண்டாகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அபுதாபியில் ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 3 நாடுகளும் பங்கேற்கும் முத்தரப்புச் பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. (a)
26 minute ago
35 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
5 hours ago