S.Renuka / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) கடந்த 2024ஆம் ஆண்டில் சிறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில், தான் தவளையிடம் இருந்து கிடைக்கும் விஷத்தை பயன்படுத்தி அலெக்ஸி நவல்னி கொல்லப்பட்டதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளன.
நம் நாட்டின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புட்டின் உள்ளார். இவருக்கு எதிராக அலெக்ஸி நவல்னி என்பவர் பிரசாரம் செய்து வந்தார்.
விளாடிமிர் புட்டின் ஊழல் செய்வதாக கூறி வந்தார். மேலும் புட்டினுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டில் அலெக்ஸி நவல்னியை விஷம் வைத்து கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பித்தார். ஜேர்மனியில் 5 மாதம் சிகிச்சை பெற்று அவர் குணமடைந்தார்.
மேலும் இந்த கொலை முயற்சியின் பின்னணியில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் இருப்பதாக அவர் கூறியிருந்தார்.
அதன்பிறகு 5 மாதங்களுக்கு பிறகு சிகிச்சை முடித்து ரஷ்யா சென்ற நிலையில், அலெக்ஸி நவல்னி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 2024 பெப்ரவரி மாதம் ஆர்க்டிக் சிறையில் அவர் இறந்தார்.
நடைபயிற்சி மேற்கொண்டபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அலெக்ஸி நவல்னியின் மரணம் இயற்கையானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அலெக்ஸி நவல்னியின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் கிளப்பினர். மேலும் பிற எதிர்க்கட்சிகளும், பிற நாடுகளும் அலெக்ஸி நவல்னியின் மரணம் இயற்கையானது என்பதை ஏற்க மறுத்தனர்.
குறிப்பாக, அலெக்ஸி நவல்னியின் மனைவி யுலியா நவல்னாயா கூறும்போது, ‛‛எனது கணவரை அதிபர் புதின் தான் விஷம் வைத்து கொன்றுள்ளார்'' என்று குற்றம்சாட்டினார். ஆனால் அது வெறும் குற்றச்சாட்டாகவே இருந்தது.
இந்நிலையில் தான் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், நெதர்லாந்து உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகளும் அலெக்ஸி நவல்னியை கொல்ல விஷ தவளையை ரஷ்யா பயன்படுத்தி உள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக 5 ஐரோப்பிய நாடுகளும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "நவல்னியின் போராட்டத்திற்கு ரஷ்ய அரசு பயந்தது. இதனால் கொடிய விஷம் கொண்ட தவளையை பயன்படுத்தி அவரை கொன்றுள்ளது எங்களுக்கு தெரியும். அந்த குறிப்பிட்ட தவளையிடம் இருந்து கிடைக்கும் நஞ்சைபயன்படுத்துவதற்கான வாய்ப்பு ரஷ்யாவிடம் உள்ளது.
அலெக்ஸி நவல்னியின் உடலில் ‘எபிபாடிடின்’ (Epibatidine) என்ற விஷம் கண்டறியப்பட்டுள்ளது. இது தவளையிடம் இருந்து கிடைக்கும் விஷமாகும். இந்த ‛எபிபாடிடின்' தென்அமெரிக்காவில் உள்ள விஷ தவளையிடம் இருந்து கிடைக்கும். இந்த தவளைகள் ரஷ்யாவில் கிடையாது.'' என கூறப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago