Ilango Bharathy / 2023 ஜனவரி 23 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘கேமரான் ஏர் பார்க்‘ என்ற நகரில் வீட்டுக்கு வீடு விமானங்கள் உள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மக்களால் ‘விமான பார்க் நகரம்‘ என அழைக்கப்படும் குறித்த நகரில் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் சிறிய வகை விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன எனவும், அவர்கள் பெரும்பாலும் போக்குவரத்திற்கு விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நகரில் உள்ள தெருக்களும் விமானத்தில் செல்ல உதவும் விதமாக மிகவும் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருப்பினும் அப்பகுதிக்கு அனுமதியின்றி வெளியாட்கள் பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
25 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago
3 hours ago