Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 04 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவில் உள்ள பாலித்தீவில் படங்பாய் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் ஒரு வினோதமான சடங்கை செய்து வருகின்றனர். அதாவது அக்கிராமத்தில் ஒருவர் இறந்து விட்டால் முதலில் அவர்களின் உடல்களை சவப்பெட்டியில் வைத்து புதைத்து விடுவார்கள். அதன் பின் சிறிது காலத்திற்கு பிறகு புதைக்கப்பட்ட சவப்பெட்டியை வெளியில் எடுத்து அதில் உள்ள எலும்புக்கூடுகளை ஒரு பெட்டியில் அடைத்து வைப்பார்கள்.
அதன் பிறகு சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து, 20 அடி உயரத்தில் இருக்கும் எருது வடிவிலான தேரில் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் எலும்பு கூடுகளுடன் இறந்தவர்களின் புகைப்படத்தையும் எடுத்துச் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இதனையடுத்து தங்கள் கையில் வைத்திருக்கும் எலும்புக்கூடுகள் அடங்கிய பெட்டியை எருது வடிவில் இருக்கும் பொம்மையில் வைத்து விடுவார்கள்.
அந்த வகையில் அண்மையில் சுமார் 117 பேரின் எலும்புக்கூடுகள் எருது பொம்மைக்குள் வைக்கப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதுடன் பொம்மை முழுமையாக எரிந்து முடிந்த பின்னர் அச் சாம்பலை எடுத்து மக்கள் கடற்கரையில் கரைத்துள்ளனர்.
இப்படி செய்வதால் இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைந்து புது வாழ்வை தொடங்குவதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.
இந்த சடங்கை தனியாக செய்வதால் அதிக செலவாகும் என்பதால் மக்கள் நிறைய சடலங்களின் எலும்புக்கூடுகளை ஒன்றாக வைத்து சடங்கு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
14 Aug 2022