Freelancer / 2023 நவம்பர் 14 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1756 முதல் 1763 வரை, பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடந்த ஏழாண்டுப் போரின் போது, பிரெஞ்சு மாலுமிகளுக்கு அவர்களது மனைவிகளும், காதலிகளும் எழுதிய கடிதங்கள் பிரிட்டனின் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்கடிதங்கள் அவர்களை அடையவில்லை.கடந்த 250 ஆண்டுகளாக இந்தக் கடிதங்கள் பிரிக்கப்படாமல் கிடந்தன.
தற்போது, இந்தக் கடிதங்களைக் கண்டுபிடித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ரெனோ மோரியோ, அவை 1700களில் வாழ்ந்த மாலுமிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையைப் பற்றிய அரிய பார்வையை வழங்குவதாகக் கூறினார்.
மேலும், இந்தக் கடிதங்கள் பத்திகளாகப் பிரித்து எழுதப்படவில்லை என்றும் இவற்றில் நிறுத்தற்குறிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். அதனால் இது குறுஞ்செய்தி மொழி போல உள்ளதாகவும் கூறுகிறார்.
ஆனால் இவை மிகவும் சோகமானவை, ஏனெனில் அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025