Freelancer / 2025 ஜூன் 03 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும்,திங்கட்கிழமை (2) நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.
சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரஷ்யாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷ்யாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, " போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்" என்றார்.
கடந்த பேச்சுவார்த்தையில், போர் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026