2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் வருடாந்த இல்லப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் பீடாதிபதி என்.கே.யோகநாதன் தலைமையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.  

இந்த  நிகழ்வில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.அண்ணாத்துரை மற்றும் அவரது பாரியார் கலந்துகொண்டனர். போட்டியில் முகிழ்நிலை ஆசிரியர்களின் இசையும் அசைவும் முக்கிய இடத்தைப் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை திரு திருமதி அண்ணாத்துரை தம்பதியினர் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .