Freelancer / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
ஈஸ்டர்ன் பிறீமியர் லீக் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.
கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சாய்ந்தமருது பிளையிங்க் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றே அரையிறுதிப் போட்டிக்கு இம்ரான் தகுதி பெற்றிருந்தது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இம்ரான் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 81 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்ஸ் 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்களையே பெற்று நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக இம்ரான் வீரர் நிஸ்கி அஹமட் தெரிவானார். தவிர, போட்டியில் மூன்று சிறப்பான பிடியெடுப்புகளை நிகழ்த்திய இளம் வீரர் அரபாத் அஹமட் நிஸ்கி அஹமட்டால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
2 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
12 Apr 2026
12 Apr 2026