Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஏப்ரல் 22 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கிழக்கு மாகாண ஹொக்கி சாம்பியனாக மீண்டும் ஐந்தாவது தடவையாக
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி மாகாண மட்ட சாம்பியனாகி சாதனை படைத்தது.
திருகோணமலை கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம் பெற்ற ஹொக்கி மாகாண மட்ட போட்டியில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
முதல் போட்டியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை அணிகள் மோதியதில் திருகோணமலை அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியும் அம்பாறையை பிரதிநிதிப்படுத்திய காரைதீவு லயன்ஸ் அணியும் மோதின.
இந்த இறுதிப்போட்டியில் 2/0 என்ற அடிப்படையில் காரைதீவு லயன்ஸ் அணி வெற்றி பெற்று மாகாண மட்ட சாம்பினானது.
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் ஸ்தாபக தலைவர் தவராசா லவன் தலைமையில் திருமலை சென்று இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை பெற்றமை பாராட்டுக்குரியது. அம்பாறை மாவட்டத்திற்கும் காரைதீவுக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று கழகத்தின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்.
10 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago