Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அணிக்கு 11 பேர் கொண்ட 18 வயதுக்குட்பட்டவர்களுக்காக மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெற்றது.
இப் போட்டிகளில் பாடசாலை மற்றும் கழகங்கள் அடங்களாக மொத்தம் 14 அணிகள் பங்கு பற்றிருந்ததுடன் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் நடைபெற்றது.
அதேநேரத்தில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டி தொடரில் பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி முதலிடம் பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
அத்துடன் இரண்டாம் இடத்தை யுனிட்டி விளையாட்டு கழகம் கைப்பற்றியது.
இப் போட்டி தொடரில் சிறந்த வீரரு்க்கான பரிசை நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் டிலக்ஷன் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் சிறந்த கோல் காப்பாளராக யுனிட்டி விளையாட்டு கழகத்தை சேர்ந்த சஞ்சிவ் கின்னத்தை பெற்றுக் கொண்டார்.
அதேவேளை 45 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கான போட்டியில் நூவரெலியா யங் யுனைடெட் கழகம் வெற்றி பெற்று முதலாம் இடத்தை பெற்றதுடன், இரண்டாம் இடத்தை நுவரெலியா லெஜெண்ட் கழகம் பெற்றுக் கொண்டது.
16 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
26 minute ago