Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 11 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவும், புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு நடைபாதை வியாபாரிகள் சங்கமும் இணைந்து மூன்றாவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள எல்.டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்த மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரானது திங்கட்கிழமை (16) நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை சந்திரா சில்வா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிகள் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன. அணிக்கு எட்டுப் பேர் கொண்ட இத்தொடரானது 5 ஒவர்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.
இம்முறை மொத்தமாக 12 அணிகள் நான்கு குழுக்களின் கீழ் போட்டியிடுகின்றதுடன் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விலகல் முறையில் அனைத்துப் போட்டிகளும் நடைபெறும்.
சம்பியன் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு எல்.டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்தக் கிண்ணமும், இரண்டாமிடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணமும் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய சிறப்பு பரிசுகள் பலவும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago