2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மைக்கல்​ஸை வீழ்த்திய இன்னிங்ஸ்

R.Tharaniya   / 2025 ஜூலை 07 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (06) அன்று காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான கடின பந்து கிரிக்கெட் போட்டியில், காத்தான்குடி மத்திய கல்லூரி அணி, மட்டக்களப்பு சென்ட் மைக்கேல்ஸ் கல்லூரி அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ட் மைக்கேல்ஸ் கல்லூரி வீரர்கள், காத்தான்குடி மத்திய கல்லூரி பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சில் தடுமாறினர். 

முதல் இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.  காத்தான்குடி மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சாளர் எம்.ஐ. இஸ்ராத் ஹுசைன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரி அணி, அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களைக் குவித்தது.  35 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 231 ஓட்டங்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

எம்.ஐ. இஸ் ராத் ஹுசைன் 70 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களும் (12 நான்கு ஓட்டங்கள் அடங்களாக), ஜே.ஏ. சைத் அலி ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

123 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த சென்ட் மைக்கேல்ஸ் கல்லூரி அணி 33.5 ஓவர்களில் 117 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

 எம்.இசட். முஸ்அப் அஹமட் 33 ஓட்டங்களை பெற்றார்.  காத்தான்குடி மத்திய கல்லூரியின் எம்.எஃப்.எம். யூசுப் 10 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும்  எம்.ஐ. யாசிர் ஹசன் 24 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 

 காத்தான்குடி மத்திய கல்லூரியின் 2004 AL வகுப்பு பழைய மாணவர்களின் பூரண அனுசரணையில் உடற்கல்வி ஆசிரியர் MFM. நஸ்பர் அவர்களால் இந்த கடின பந்து அணி நிர்வகிக்கப்படுகின்றது.  இவ் அணியின் பயிற்றுவிப்பாளர்களாக M.M.M பாஹிம் மற்றும் M.A.M நிஜாம் மற்றும் M. அப்துல் ரஹ்மான் ஆகியோர் செயற்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

ரீ.எல்.ஜவ்பர்கான் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .