2026 மார்ச் 21, சனிக்கிழமை

பிரித்தானிய உயர்ஸ்தானிக பாதுகாப்பு ஆலோசகர் விமானப்படை தளபதியுடன் சந்திப்பு

J.A. George   / 2021 டிசெம்பர் 09 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடைபெறும் இலங்கைக்கான  பிரித்தானிய உயர்ஸ்தானிக பாதுகாப்பு ஆலோசகர்களான கேர்ணல் டேவிட் அஸ்மன் , இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரனவை சந்தித்து பேசினார்.

விமானப்படை தலைமைகாரியாலயத்தில்  நேற்று(08) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த  சந்திப்பில்  கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிக காரிலயலத்தின் புதிய   பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பால் கிளைடனும் கலந்துகொண்டார்.

இதன்போது இருதரப்பினரும் இடையிலான  கலந்துரையாடல் நிறைவு பெற்ற பின்னர் நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது.

அத்தோடு  புதிய பாதுகாப்பு ஆலோசகருக்கு  விமானப்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X