2024 டிசெம்பர் 10, செவ்வாய்க்கிழமை

பாலி இசைப் போட்டியில் இலங்கைக்கு 27 பதக்கங்கள்

Mayu   / 2024 ஜூலை 29 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி கபில

13வது சர்வதேச பாலி இசைப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி "சோல் சவுண்ட்ஸ் அகாடமி"யின் 34 மாணவர்கள் குழுப் பிரிவில் 17 தங்கப் பதக்கங்களையும், 08 வெள்ளிப் பதக்கங்களையும், 02 தங்கப் பதக்கங்களையும் வென்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் சனிக்கிழமை (21)  முதல் ஞாயிற்றுக்கிழமை (27) வரை உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த இசைப் போட்டி நடைபெற்றது.

இந்த சாதனைகளுடன் சிங்கப்பூரில் இருந்து சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் SK-468 இல் திங்கட்கிழமை (28) இரவு 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .