Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி
ஓய்வு பெற்ற பேராசிரியர் செ.யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும்
கருணையோகம் மலர் வெளியீடு என்பன சனிக்கிழமை (24) மட்டக்களப்பு நகர
மண்டபத்தில் நடைபெற்றன.
பணி நயப்பு விழாவின் தலைவர் காசுபதி நடராஜாவின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் நயப்புரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர்
பேராசிரியர் ரமிஸ் அப்துல்லாஹ், கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை
விரிவுரையாளர் அருட்திரு ஏ.ஏ. நவரட்ணம், கல்வி அமைச்சின் பணிப்பாளர்
எஸ். முரளிதரன், மூத்த எழுத்தாளர் குப்பிளான் ஐ.சண்முகம் மற்றும் ஓய்வு
நிலை மக்கள் வங்கி முகாமையாளர் மன்னார் க. திரவியம் ஆகியோர்
நிகழ்த்தினர்.
வெளியீட்டுரையை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் றூபி வலண்டினா
பிரான்சிஸ் நிகழ்த்தினார்.
முதல்பிரதியை மட்டக்களப்பு தமிழ் சங்கப் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இதில் கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்பிரமணியம்,உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
16 minute ago
20 minute ago