Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கொழும்பு, வெஸ்லி கல்லூரியில் நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிப்பதற்கு நிதி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
சுமார் 3 கோடி ரூபா செலவில் இந்த நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, இந்திய இசைக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
'மதுரகானம்' எனும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியானது பிரபல தென்னிந்தியப் பாடகர் மதுர குரலோன் மதுபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்திய ஜூனியர் சூப்பர் சிங்கர்களான நித்தியஸ்ரீ, ஸ்ராவன் ஆகியோருடன் இந்திய திரைப்பட நடனக் கலைஞர் ஜெயலக்ஷ்மியின் நடனங்களும் இதில் இடம்பெற்றன.
இதேவேளை, விஜய் தொலைக்காட்சி அலைவரிசைப் புகழ் சிவகார்த்திகேயன் இந்த இசை நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியதுடன், இலங்கையின் இசைக் கலைஞர்களான பிரசாந்தினி, ஷாயா, அஜித், சத்தியா சுரேஸ் ஆகியோரும் இணைந்து தங்களது பங்களிப்புக்களை நல்கினர்.
சித்தாரா இசைக் குழுவினர் இசையில் நடைபெற்ற இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலைஞர்கள் மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். Pix By :- Nisal Baduge
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)


6 minute ago
15 minute ago
19 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
19 minute ago
27 minute ago