Janu / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அசாதாரண இயற்கை சூழல் காரணமாக பல இடங்கள் பாரிய கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
குறிப்பாக நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்பள்ளம் எனும் கிராமம் மிகவும் மோசமான கடல் அரிப்புக்கு இலக்காகி வருகிறது .
கடல் அருகில் இருந்த தென்னந்தோட்டங்களில் சுமார் 100க்கும் அதிகமான தென்னைகளை கடலில் உள்வாங்கியுள்ளது. சுமார் 100 மீட்டர் நிலப் பரப்பை கடலுக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது .
அங்குள்ள மக்கள் தங்கள் குடிமனைகளும் கடலுக்குள் சென்று விடுமோ என்று தினம் தினம் அஞ்சி வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வி.ரி.சகாதேவராஜா


6 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
45 minute ago