Editorial / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா நகர சபையின், 2022 ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட (பட்ஜெட்) விவாதம் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இன்று (14) மாலை சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
அதன்பின்னர் வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது. பட்ஜெட்டுக்கு எதிராக 07 வாக்குகளும் ஆதரவாக 05 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனால், அந்த வரவு- செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.
தவிசாளர் உட்பட 13 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றனர். அதில், நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின் உறுப்பினர் நாஸிக் மஜீத், சபை அமர்வுக்கு இன்றைய தினம் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026