Freelancer / 2021 நவம்பர் 21 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில் செங்காமம் கிராமத்தின் 05ம் கட்டையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரமதாசவினால் கட்டப்பட்ட 66 வீடுகள் கவனிப்பாரற்று பாழடைந்த நிலையில் காணப்படுவதாக, செங்காமம் ஜும்ஆ பள்ளிவாயலின் தலைவர் எம்.எல்.இஸட். ஆப்தீன், இன்று (21) தெரிவித்தார்.
இவ்வீடுகள் பூர்த்தியடையாத நிலையில் தற்போது பாழடைந்து காணப்படுவதால் நாசகார செயல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் இப் பிரதேசத்தில் இரவு வேளையில் ஒரு அச்ச நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜீத் பிரேமதாசவின் 100 நாள் வேலைத்திட்டத்தினுாடாக வீடு இல்லாதவர்களுக்கு வழங்குவதற்காக 66 வீடுகள் சகல வசதிகளுடன் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுடிருந்நது.
இந்த வீடுகளை வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கைவிடப்பட்ட நிலையிலுள்ள வீடுகளை மீள புனரமைத்து வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டுமென கேட்டுள்ளார்.
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
55 minute ago
1 hours ago