2025 ஜூலை 05, சனிக்கிழமை

போதைப்பொருள் விற்பனைக் குழு சிக்கியது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான போதைப்பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று(17) அதிகாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் வீடொன்றில் வைத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 300கிராம் ஐஸ் போதைப்பொருளும் 15கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளும் 2,50,000 ரூபாய் பணமும் மீட்கப்பட்டன.

இக்கைது நடவடிக்கையின் போது சுமார் 38 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள போதைப்பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கல்முனையிலும் போதைப்பொருள் விற்பனை நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்து 10கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இதன் போது பெண் ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கொழும்பில் உள்ள பிரதான போதைப்பொருள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .