Janu / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டர் சைக்கிளை திருடிச் சென்ற மூவரை புதன்கிழமை (04) கைது செய்து 4 மோட்டர் சைக்கிள்களை மீட்டுள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் கடந்த 27ம் திகதி நிந்தவூர் பிரதேசத்தில் வீடு ஒன்றிற்கு வர்ணம் தீட்டுவதற்காக மோட்டர் சைக்கிளிள் சென்று அதனை வீட்டின் வெளி மதில்பகுதியில் நிறுத்திவிட்டு வர்ணம் தீட்டும் வேலையில் ஈடுபட்பிட்டு பிற்பகல் வெளியே வந்து பார்த்தபோது மோட்டர் சைக்கிள் காணப்படாததால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் விசேட புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கு அமைவாக புதன்கிழமை (04) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் மோட்டர் சைக்கிளை திருடிச் சென்ற மூவரை கைது செய்ததுடன் பாகங்களாக கழற்றி விற்கும் காராச் ஒன்றிலிருந்து திருட்டுப்போன மோட்டர் சைக்கிள் உட்பட 4 மோட்டர் சைக்கிள்களை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22, 28, 27 வயதுடைய பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை வியாழக்கிழமை (05) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago